கணவரின் பிசினஸுக்காக ரூ.10,000 கொடுத்த பெண்.. இன்று அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.608000 கோடி.. அவரின் கணவர்...

First Published Apr 18, 2024, 10:55 AM IST

இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான என்.ஆர் நாராயண மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட சுதா மூர்த்தியின் பயணம் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தோற்றத்துடன் தொடங்கியது.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர், இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவி என பன்முகங்களை கொண்டவர். 

இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான என்.ஆர் நாராயண மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட சுதா மூர்த்தியின் பயணம் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தோற்றத்துடன் தொடங்கியது. தி கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்ட சுதா மூர்த்தி, தனது கணவரின் தொழில்முனைவு பயணத்தில் தனது முக்கிய பங்கு குறித்து பேசினார்.

கல்லூரி நண்பர் பிரசன்னா மூலம் நாராயண மூர்த்தி தனக்கு அறிமுகமானதாகவும் அவர் கூறினார். தனது கணவரின் வணிக நோக்கத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசினார்.. 1981 ஆம் ஆண்டில், நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தார்,

அப்போது சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ரூ.10,000 வழங்கி தனது கணவர் தொழில் தொடங்க உதவினார். இந்த தொடங்கினார். இந்த நிதி உட்செலுத்துதல் இன்ஃபோசிஸின் ஸ்தாபனத்தில் முக்கிய பங்கு வகித்தது.

இதை தொடர்ந்து வேகமாக முன்னேற தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. அந்நிறுவனத்தின் சந்தை மூலம், ரூ.608,000 கோடி ஆகும். நாராயண மூர்த்திக்கு ரூ. 10,000 வழங்கிய சுதா மூர்த்தி எடுத்த முடிவு இன்றுவரை அவரது "சிறந்த முதலீடு" என்று பாராட்டப்படுகிறது.

சுதா மூர்த்தி - நாராயண மூர்த்தி தம்பதிக்கு அக்ஷதா மற்றும் ரோஹன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்தார்.

சுதா மூர்த்தி தனது ‘டாலர் பாஹு’ நாவலுக்காகவும் பிரபலமானவர். முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் 2001 ஆம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சியில் நாடகத் தொடராக ஒளிபரப்பப்பட்டது. சுதா மூர்த்தி எழுதிய ‘ரூனா’ என்ற கதை மிகவும் பிரபலமானது. இந்த கதையை தழுவி மராத்தி திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.

தற்போது, சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 0.95% பங்குகளை வைத்துள்ளார். சுதா மூர்த்தியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.755 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது,  2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 

2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ராஜ்ய சபாவின் நியமன எம்பியாக சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!