Health Tips : தப்பி தவறி கூட இந்த மசாலாக்களை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க..!

First Published Apr 26, 2024, 11:33 AM IST

பொதுவாகவே, உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மசாலாவும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஆனால் சில மசாலாப் பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும். அவை என்னவென்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
 

பொதுவாகவே, உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு சுவையை கொடுப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வாரி வழங்குகிறது. அதுவும் சில மசாலாக்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. 

ஆனால் அவை அனைத்தும் முதலில் பலனளித்ததாகத் தெரிந்தாலும், அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, செரிமான அமைப்பையும் சீர்குலைக்கிறது. மேலும் இது குடலையும் பாதிக்கும். எனவே, அந்த மசாலாப் பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் மசாலா சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். இது வாயு மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சிறுநீரகத்தையும் பாதிக்கும். எனவே, அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத மசாலாப் பொருட்கள் எவை என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்..

இலவங்கப்பட்டை: பொதுவாகவே, இது எல்லாருடைய வீடுகளிலும் இருக்கும். இது உணவின் சுவை கூடும். சமையலைத் தவிர, இது அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக தேநீரிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை அளவுக்கு மீறி உட்கொண்டால் கல்லீரல் பாதிப்படையும். மேலும் அதிகமாக பயன்படுத்தினால் அலர்ஜி, வாய் புண், முகத்தில் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

கருப்பு மிளகு: இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது மற்றும் உணவின் சுவையையும் அதிகரிக்கும். குறிப்பாக, இது சளி மற்றும் இருமலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், குடலை பாதிக்கும்.

இதையும் படிங்க:  உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஏலக்காய்.. எப்படி தெரியுமா?

வெந்தயம்: இது எடை இழப்பு, தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. மேலும் இது வயிற்றை சுத்தப்படுத்தும். இருப்பினும், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். மேலும் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது தவிர, வயிற்றின் கீழ் பகுதியும் வலிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  கொலஸ்ட்ரால் டக்குனு குறைய சூப்பரான வீட்டு வைத்தியம் இதோ..!!

ஓமம்: வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வாத நோய், முகப்பரு, ஈறு வீக்கம், சளி, இருமல் போன்ற பல நோய்களையும் குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி,  இது எடை இழப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு சூடான மசாலா என்பதால், அதை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கோடையில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!