Janhvi Kapoor: அம்மா மயிலை மிஞ்சிய குயிலு! ஜாக்கெட் போடாமல்... விதவிதமான சேலையில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

First Published Jan 26, 2024, 6:14 PM IST

நடிகை ஜான்வி கபூர்... அம்மா ஸ்ரீதேவியை மிஞ்சும் விதத்தில், விதவிதமான சேலையில் ஜாக்கெட் போடாமல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது திரையுலகில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இவருடைய லேட்டஸ்ட் வித் அவுட் பிளவுஸ் போட்டோ ஷூட் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி, ஏற்கனவே திருமணமான தயாரிப்பாளர் ஜான்வி கபூரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஸ்ரீதேவியை கரம் பிடித்தார் போனி கபூர். திருமணத்திற்கு முன்பே, இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், ஸ்ரீதேவியை கல்யாணம் செய்வதற்கு முன்பே அவர் கர்ப்பமானார். எனவே, இவர்களின் திருமணம் அவசர அவரசமாக மிகவும் எளிமையான முறையில் நடந்தது. 

Vadivelu: பவதாரிணி இறந்த செய்தியை கேட்டு நொறுங்கிவிட்டேன்! கண்ணீர் ததும்ப.. கதறியபடி இரங்கல் தெரிவித்த வடிவேலு

ஜான்வி கபூர் ஸ்ரீதேவிக்கு திருமணமான 6 மாதங்களிலேயே, 1997 ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தை பெற்ற பின்னர், திரையுலகில் இருந்து தற்காலிகமாக ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், இவருடைய மவுசு, பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகத்தில் தற்போது வரை கொஞ்சம் கூட குறையவில்லை என்றால் அது மிகையல்ல.

ஜான்வி - குஷி ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்து, வளர்ந்த பின்னர்... சில திரைப்படங்களில் நடித்தார். அப்படி இவர் நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ், மாம், புலி போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Anna Serial: புடவையை வைத்து பிளான் போடும் சௌந்தரபாண்டி! ஷண்முகத்திடம் பம்மிய முத்துப்பாண்டி.. நடக்க போவது என்ன

ஸ்ரீதேவிக்கு தன்னுடைய மகள்களை, திரையுலகில் நடிக்க வைக்க ஆர்வம் இல்லை என்றாலும், மகள் ஜான்வி கபூரின் விருப்பத்திற்கு ஏற்ப, கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவான... 'தடக்' படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

ஆனால் இப்படம் வெளியாகும் முன்பே ஸ்ரீதேவி இறந்தது மிகப்பெரிய  வேதனை. உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Blue Star Vs Singapore Saloon: வசூலில் எது டாப்பு! சிங்கப்பூர் சலூனா? ப்ளூ ஸ்டாரா? முதல் நாள் கலெக்ஷன் விவரம்!

தன்னுடைய அம்மா இருந்தால், தனக்கு எப்படி பட்ட கதைகளை தேர்வு செய்வாரோ... அதே போல் ஜான்வி கூடுதல் கவனத்துடன் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  இதுநாள் வரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது தெலுங்கில் RRR பட நாயகன் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், தற்போது... அம்மா மயிலையே மிஞ்சும் விதத்தில், கண்டாங்கி சேலை கட்டி ஜாக்கெட் போடாமல் எடுத்து கொண்டுள்ள சில போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Bhavatharini Raja: பவதாரிணி உடல் அஞ்சலிக்காக எங்கு வைக்கப்பட உள்ளது? இறுதி சடங்கு குறித்து வெளியான தகவல்..!

click me!