A.R Murugadoss : 14 ஆண்டுகள் கழித்து கோலிவுட்டில் ரீ-என்ட்ரி.. SK 23 - படத்தில் இணைந்த சூப்பர் மாஸ் நடிகர்!

First Published Apr 26, 2024, 8:51 AM IST

Sivakarthikeyan 23 : பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தை நடித்து வருகின்றார். அப்பட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

Dheena

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான "தீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். அவருடைய இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இறுதியாக தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

Vishal : ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து... நீதியால் உங்களை வெல்வேன் என நடிகர் விஷால் சவால்
 

Darbar

அதன் பிறகு திரைப்படங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்காமல் இருந்த ஏ.ஆர் முருகதாஸ், தற்பொழுது பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இப்பட பணிகள் விறுவிறுப்பாக நடந்த ஒரு நிலையில், இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Biju Menon

பிஜு மேனன், மலையாள திரை உலகில் மிகப்பெரிய நடிகரான இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "போர்க்களம்" என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், சுமார் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தமிழ் மொழியில் ரீ என்ட்ரி கொடுக்கின்றார். இந்த திரைப்படத்திற்காக சுமார் ஓர் ஆண்டுக்கு தனது கால் சீட்டை ஏ.ஆர் முருகதாஸிற்கு கொடுத்துள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் பிஜு மேனன் கூறியுள்ளார்.

Amaran: உன்னை கண்டு பெருமை கொள்கிறது இந்தியா! முகுந்த் வரதராஜன் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ!

click me!