சிவகார்த்திகேயனா இது? கமல் படத்துக்காக கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் SK - போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

First Published Feb 13, 2024, 8:31 AM IST

கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்.கே.21 திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர ஒர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார்.

sk21 Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே.21. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், ரங்கூன் படத்தை இயக்கியவருமான ராஜ்குமார் பெரியசாமி தான் எஸ்.கே.21 திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

sk21 Movie

எஸ்.கே.21 திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் ஒரு பயோபிக் ஆக உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தியது படக்குழு. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மிகவும் ரிஸ்க் எடுத்து அங்கு ஷூட்டிங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். எஸ்.கே.21 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதனால் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அயலான் பிளாப்பா எவன் சொன்னான்... சக்சஸ் மீட் கொண்டாடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

sk21 Movie Update

அந்த வகையில் நேற்று எஸ்.கே.21 படத்தின் முதல் அப்டேட் வெளியானது. அதன்படி, இப்படத்தில் ராணுவ வீரனாக நடிப்பதற்காக கடினமாக ஒர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் எடுத்துள்ளார். அவரது ஒர்க் அவுட் காட்சிகள் அடங்கிய மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு வருகிற பிப்ரவரி 16-ந் தேதி எஸ்.கே.21 படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

sk21 Sivakarthikeyan Transformation

இதையடுத்து சட்டையின்றி கட்டுமாஸ்தான் உடற்கட்டுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயன், பெரிய அளவில் கனவு காணுங்கள் என்கிற உத்வேகம் அளிக்கும் கேப்ஷன் உடன் போஸ்ட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் தங்கள் பயணத்தை என்ஜாய் செய்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வேறலெவல் Transformation போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனா இது என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... "நீங்க தான் எனக்கு Inspiration".. அயலான் படம் பார்த்த ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயனுக்கு போனில் சொன்னது என்ன?

click me!