- Home
- Gallery
- "நீங்க தான் எனக்கு Inspiration".. அயலான் படம் பார்த்த ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயனுக்கு போனில் சொன்னது என்ன?
"நீங்க தான் எனக்கு Inspiration".. அயலான் படம் பார்த்த ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயனுக்கு போனில் சொன்னது என்ன?
Rajinikanth About Ayalaan : சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், போன் மூலம் சிவகார்த்திகேயனை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Ayalaan
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "இன்று நேற்று நாளை" என்கின்ற திரைப்படத்தை உருவாக்கி, வெற்றி கண்ட இயக்குனர் தான் ஆர். ரவிக்குமார். அவருடைய இயக்கத்தில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் "அயலான்". மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் படமாக இது வெளியானது குறிப்பிடத்தக்கது.
கனத்த இதயத்துடன் அன்பு மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா - கலங்க வைக்கும் புகைப்படம்
Ayalaan movie
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 4500க்கும் மேற்பட்ட விசுவல் எபெக்ட் காட்சிகள் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் எடுக்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது அயலான் என்றால் அது மிகையல்ல.
Rajinikanth and Siva
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அப்பொழுது சிவகார்த்திகேயனிடம் பேசிய அவர் "எப்படி நீங்கள் இவ்வளவு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள்" என்று கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன், "உங்களுடைய ரோபோ திரைப்படம் தான் என்னை சயின்ஸ் பிக்சன் படங்களில் நடிக்க தூண்டியது. அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்" என்று கூற, உடனே சூப்பர் ஸ்டார் "இப்பொழுது நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன், பல புதிய கதைக்கலங்களை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.