வின்னரில் ‘கைப்புள்ள’யாக நடிக்க முதல் சாய்ஸ் வடிவேலு இல்ல! நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய அந்த நடிகர் யார் தெரியுமா?

First Published May 9, 2024, 10:38 AM IST

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான எவர்கிரீன் காமெடி திரைப்படமான வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் பற்றி பார்க்கலாம்.

Vadivelu

தமிழ் சினிமாவில் தரமான காமெடி படங்களை இயக்கி வெற்றிகண்டவர் தான் சுந்தர் சி. கவுண்டமணி, செந்தில் தொடங்கி யோகிபாபு வரை பெரும்பாலான காமெடி நடிகர்களுடன் பணியாற்றிய ஒரே இயக்குனர் சுந்தர் சி தான். அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது வின்னர் தான். பிரசாந்த் ஹீரோவாகவும், கிரண் ஹீரோயினாகவும் நடித்த இப்படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Sundar c

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் அப்படத்தை இயக்கியதாக சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தெலுங்கு படங்கள் தொடர்ந்து தன் பட காட்சிகளை காப்பியடித்ததை பார்த்து கடுப்பான சுந்தர் சி. அவர்களை பழிவாங்குவதற்காக தெலுங்கு படங்களை காப்பியடித்து வின்னர் படத்தை இயக்கினாராம். ஆனால் கடைசியில் அந்த படத்தையும் தெலுங்கில் காப்பியடித்து எடுத்துவிட்டனர் என்று சுந்தர் சி கூறியது இணையத்தில் வைரல் ஆனது. 

இதையும் படியுங்கள்... அதிரப்போகும் அரசியல் களம்... தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நாள் குறித்த விஜய் - எங்கு.. எப்போது?

Vivek

வின்னர் படம் காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு அப்படத்தின் காமெடி காட்சிகள் தான் காரணம். குறிப்பாக அப்படத்தில் இடம்பெறும் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்திரம் தான் அப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. அப்படத்தின் காமெடி காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வின்னர் படத்தில் கைப்புள்ளயாக முதலில் நடிக்க இருந்தது வடிவேலு இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் உண்மை.

Vadivelu is not the first choice for Winner Movie

வின்னர் படத்தில் கைப்புள்ள கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் சுந்தர் சி-யின் முதல் சாய்ஸாக இருந்தது விவேக் தானாம். ஆனால் அந்த சமயத்தில் சின்ன பிரச்சனை காரணமாக விவேக்கிற்கும் சுந்தர் சி-க்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால் விவேக் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து தான் வடிவேலுவை கைப்புள்ளயாக நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி. ஒரு வேளை கைப்புள்ளயாக விவேக் நடித்திருந்தால் அது வடிவேலு அளவுக்கு ஹிட்டாகி இருக்குமா என்பது சந்தேகம் தான்.

இதையும் படியுங்கள்... Vettaiyan: வேட்டி, சட்டையுடன் மாஸ் லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்; இறுதி கட்ட படபிடிப்பு பணியில் வேட்டையன்

click me!