அயலான் பிளாப்பா எவன் சொன்னான்... சக்சஸ் மீட் கொண்டாடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

First Published Feb 6, 2024, 2:56 PM IST

பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அயலான் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ayalaan Movie Team

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் அயலான். இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார், இயக்க ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளதாக அந்த சமயத்தில் அறிவிப்பு வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படத்தை கிடப்பில் போட்டனர்.

ayalaan Success Meet

இதையடுத்து கொரோனா காலகட்டத்தில் ஷூட்டிங் நடத்த முடியாமல் போனதால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காத்திருந்து இப்படத்தின் ஷூட்டிங்கை 2022-ம் ஆண்டு முடித்தனர். ஷூட்டிங்கிற்கு பின்னர் தான் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலே காத்திருந்தது. அயலான் படத்தில் ஏலியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், அதனை விஎஃப் எக்ஸில் உருவாக்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆனது.

ayalaan movie sivakarthikeyan

சுமார் 7 ஆண்டுகள் பல்வேறு தடங்கல்களை தாண்டி இப்படம் கடந்த மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், பால சரவணன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குழந்தைகளை வெகுவாக கவர்ந்த இப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸிடமும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... "நீங்க தான் எனக்கு Inspiration".. அயலான் படம் பார்த்த ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயனுக்கு போனில் சொன்னது என்ன?

ayalaan success meet cake

அயலான் படம் ரூ.100 கோடி வசூலை எட்டிவிட்டதாக சொல்லப்பட்டாலும், இப்படம் பெரும்பாலான இடங்களில் தோல்வியை சந்தித்ததாக செய்தி ஒன்று உலா வந்தது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. தெலுங்கில் இப்படம் ரிலீஸ் ஆகாததால் அங்கும் இப்படத்தை ரூ.2 கோடி கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் பரவின.

ayalaan success

இப்படி அயலான் படத்தின் வசூல் பற்றிய விமர்சனங்கள் ஒரு புறம் வந்த வண்ணம் இருந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அயலான் படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த சக்சஸ் மீட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

cibi chakravarthy and sivakarthikeyan

இந்த சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியும் கலந்துகொண்டுள்ளார். இவர் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் பண்ண உள்ளதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... அயலான் 2 உறுதி.. ஆனா அதுக்கு முன்னாடி இன்னொரு படம் இருக்கு - மாஸ் ஹீரோவை வைத்து பிளான் போட்ட இரா. ரவிக்குமார்!

click me!