ஓசூரில் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான மகனை தந்தையே தனது உறவினர்கள் உதவியுடன் கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்நாத். இவருடைய மகன் ஜெய்தீப் (வயது 24) திருமணமாகாதவர். நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக 12ம் தேதி தந்தை மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆள் பற்றாக்குறை, செலவு அதிகம்; ராட்சத ட்ரோன்களை களத்தில் இறக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்
undefined
உடற்கூறு ஆய்வில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பிரேம் நாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் இறந்த ஜெய்தீப் சீட்டாட்டம்(கேம்லிங்) மற்றும் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததார். மேலும் அடிக்கடி பெங்களூரு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஐந்து லட்சம் வரை நாங்கள் செலவு செய்துள்ளோம்.
புகார் அளித்த நபர்களை குடும்பத்தோடு காலி செய்ய துடிக்கும் கஞ்சா கும்பல் - கோவையில் பரபரப்பு
அப்படி இருந்தும் தொடர்ந்து போதையில் எங்களை அடிக்கடி துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் எங்களுக்கு என்ன செய்வது என தெரியாமல் கொலை நாங்களே செய்ததாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து கொலையில் தந்தைக்கு உதவியாக இருந்த தம்பி யஸ்வந்த் (19) மற்றும் அவருடைய தாய் மாமன் மஞ்சுநாத் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
இதை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். மதுவுக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகிய மகனை கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.