Crime: மயிலாடுதுறையில் ஓடும் பைக்கில் காதலியால் எரிக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி பலி

Published : May 14, 2024, 08:16 PM IST
Crime: மயிலாடுதுறையில் ஓடும் பைக்கில் காதலியால் எரிக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி பலி

சுருக்கம்

மயிலாடுதுறையில் வேறொரு பெண்ணுடன் பழகியதால் காதலியால் தீ வைக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். 

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். 

மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான மகனை தந்தையே கொன்று தொங்கவிட்ட கொடூரம் - ஓசூரில் பரபரப்பு

அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். 

ஆள் பற்றாக்குறை, செலவு அதிகம்; ராட்சத ட்ரோன்களை களத்தில் இறக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்

இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி ஆகாஷ் இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இளம் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு