ஆள் பற்றாக்குறை, செலவு அதிகம்; ராட்சத ட்ரோன்களை களத்தில் இறக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்

By Velmurugan s  |  First Published May 14, 2024, 7:37 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் விவசாயிகள், கால விரயம் தவிர்க்கப்படுவதால் ட்ரோன் முறை மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக தகவல்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 07 ஆயிரத்து 435 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், 38 ஆயிரத்து 441 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. தற்போது, முல்கட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 30 முதல் 40 நாள் பருவத்தில் விளைந்துள்ள நிலையில், விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

புகார் அளித்த நபர்களை குடும்பத்தோடு காலி செய்ய துடிக்கும் கஞ்சா கும்பல் - கோவையில் பரபரப்பு

Tap to resize

Latest Videos

undefined

பொதுவாக விவசாயக் கூலி தொழிலாளர்களைக் கொண்டு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மருந்து செலவுடன் சேர்த்து ரூ.700 வரை செலவாகிறது. நாளொன்றுக்கு ஒரு விவசாய கூலித்தொழிலாளி 3 ஏக்கர் வரை களைக்கொல்லி தெளிப்பார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வைகல் கிராமத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ ஃபவுண்டேஷன் சார்பில் ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்க ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. 

சிவகங்கையில் நண்பனை கொன்று புதைத்துவிட்டு பணத்தை பங்குபோட்ட குடிகார கும்பல்

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் வேரின் அடி வரை மருந்து செல்வதால் களைகள் முற்றிலுமாக அழியும். பெருவிவசாயிகளின் நிலங்களுக்கு 32 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரிய ட்ரோன் மூலமும், சிறு விவசாயிகளுக்கு 12 லிட்டர் கொள்ளவு கொண்ட சிறிய ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளித்துத் தரப்படுகிறது. ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிப்பதால், கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், செலவும் குறைவதால் வைகல் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் நாட்டம் காட்ட தொடங்கி உள்ளனர்.

click me!