Sivakarthikeyan: SK21 படத்தில்.. சாய்பல்லவியின் காட்சிகள் இணையத்தில் லீக்! அதிர்ச்சியில் படக்குழு!

First Published Dec 6, 2023, 2:28 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 21 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Sivakarthikeyan Next Movie

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடைசியாக வெளியான 'மாவீரன்' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் மிரட்டியது. இதைத்தொடர்ந்து விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
 

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21வது படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

ஆஹா கல்யாணம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இளம் நடிகை! இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு!

Sivakarthikeyan

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில்... தற்போது சிவகார்த்திகேயனின் செண்டிமெண்ட் இடமான... புதுச்சேரியை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இவரின் மனைவியாக சாய் பல்லவி, ஐந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
 

Sai pallavi

விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய் பல்லவி தன்னுடைய கணவர் சிவகார்த்திகேயனுக்கு காத்திருப்பது போல்... இந்த வீடியோ இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் இந்த வீடியோவை அதிகம் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைவர் 170 படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகை ரித்திகா சிங்! ரத்த காயங்களுடன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோஸ்

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளிலும் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!