மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்! பில்கேட்ஸ் உடன் டைம் டிராவல் செய்து பிறந்தநாள் கொண்டாடிய ஜூக்கர்பெர்க்!

Published : May 19, 2024, 01:44 PM IST

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த மே 14ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன் தனது 40வது பிறந்தாளைக் கொண்டாடினார்.

PREV
16
மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்! பில்கேட்ஸ் உடன் டைம் டிராவல் செய்து பிறந்தநாள் கொண்டாடிய ஜூக்கர்பெர்க்!
Meta CEO Mark Zuckerberg

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த மே 14ஆம் தேதி தனது 40 வயதைக் கடந்தார். எல்லோரையும் போலவே, அவரது தனது நண்பர்கள், குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.

26
Mark Zuckerberg 40th birthday with Microsoft founder Bill Gates

ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்தநாள் ஒரு சிறப்பு விருந்தினருடன் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் படங்களை ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்ககத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஜூக்கர்பெர்க் இளமைப் பருவத்தில் வாழ்ந்த சில இடங்களை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கி ஆச்சிரயத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அவரது மனைவி பிரிசில்லா.

36
Mark Zuckerberg's special guest

கோடிங் எழுத கற்றுக்கொண்ட குழந்தைப் பருவ படுக்கையறை, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தைத் தொடங்கிய ஹார்வர்ட்டில் உள்ள தங்குமிடம், தரையில் மெத்தையுடன் அவரது முதல் அபார்ட்மெண்ட், அவரது முந்தைய அலுவலகங்களில் ஒன்று என பலவற்றை அந்த காலத்தில் இருந்ததைப் போலவே உருவாக்கி இருக்கிறார்.

46
Priscilla Chan wishes Mark Zuckerberg on 40th birthday

இந்த படங்களில் ஒன்றில் மைக்ரோசாப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸுடன் ஜூக்கர்பெர்க் போஸ் கொடுத்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ் இருவரும் ஒரே அறையில் இருந்த காலத்தை மீண்டும் நினைவுகூரும் விதமாக உள்ள இந்தப் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

56
Mark Zuckerberg with Priscilla Chan and family

ஒரு படத்தில், அவர் தனது மகள்களுடன் வசித்த அறையைக் காணலாம். தனது பிறந்தநாளை தன்னுடன் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஜுக்கர்பெர்க், கூறியுள்ளார்.

66
Mark Zuckerberg with his children

ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சானும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "மார்க் பொதுவாக அவரது பிறந்தநாளைக் கொண்டாட என்னை அனுமதிப்பதில்லை. ஆனால் அவரது 40வது பிறந்தநாளை நண்பர்களும் குடும்பத்தினரும் கொண்டாட விரும்பினோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories