sundar pichai
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் ஏயோஸ் நிறுவனத்தின் நிறுவனர் வருண் மய்யாவுடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தனது பயணங்களைப் பற்றி பேசிய அவர், தனக்குப் பிடித்த இந்திய உணவுகள் குறித்து விரிவாகக் கூறியிருக்கிறார்.
சுந்தர் பிச்சை பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையி ஆகிய மூன்று மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் தனக்குப் பிடித்த உணவைத் தேர்ந்தெடுத்தார். பெங்களூருவில் தோசை, டெல்லியில் சோளா பூரி, மும்பையில் பாவ் பாஜி சாப்பிடுவது பிடிக்கும் என்று அவர் கூறினார்.
“பெங்களூருவில் இருக்கும்போது எனக்கு தோசை சாப்பிடப் பிடிக்கும். டெல்லி என்றால், சோளா பூரி. மும்பையாக இருந்தால், பாவ் பாஜி சாப்பிடுவேன்” என்று சுந்தர் பிச்சை கூறினார்.
FAANG எனப்படும் ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள், நெட்ஃபிக்ஸ், கூகுள் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி குறித்துப் பேசிய சுந்தர் பிச்சை, "உண்மையான வெற்றி அனைத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து வெற்றியின் ரகசியம் பற்றிப் பேசிய சுந்தர் பிச்சை, ஆழமான புரிதல் இருந்தால் உண்மையான வெற்றி கிடைக்கும் என்றார். இதை விளக்குவதற்காக அமீர் கானின் '3 இடியட்ஸ்' படத்தில் வரும் மோட்டார் சைக்கிள் காட்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
“3 இடியட்ஸ் படத்தில் அமீர் கானிடம் மோட்டார் என்றால் என்ன என்று கேட்கும் காட்சி உள்ளது, உங்களுக்குத் தெரியும்... அதில் மோட்டார் என்றால் என்ன என்று விவரிக்கிறார். ஒரு மோட்டார் என்றால் என்ன என்பது அதை நீங்கள் உண்மையில் எப்படி புரிந்துகொள்கிளீர்கள் என்பதில் உள்ளது" என்று விளக்கினார்.