நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள் தான்.. நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம்- செல்வப்பெருந்தகை

By Ajmal Khan  |  First Published May 19, 2024, 1:38 PM IST

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் இரண்டு நாட்களில் முக்கிய தகவல் குறித்து கூறுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 
 


மோடி அரசியல் சட்டத்தை பின்பற்றவில்லை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது, நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது.  நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு  தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.பிரதமர் மோடி முன்னுக்கும் பின்பு முரனாக பேசி வருகிறார்.  மத அரசியல், சாதிய அரசியல்,மொழி அரசியல் செய்யக்கூடாது என்று ஒரு அரசியல் சட்டம் உள்ளது. ஆனால்  மோடி அரசியல் சட்டத்தை பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக பேசி வருகிறார்.  

Latest Videos

உடலில் கல்லோடு சேர்த்து கம்பி சுற்றியிருக்கு.!! தற்கொலை செய்பவர்கள் இப்படி செய்யமாட்டாங்க - திருநாவுகரசர்

நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம்

தற்போது கலவர அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது  யாரு வெறுப்பு அரசியல் பேசினாலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . எனவே பிரதமருடைய பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்படும் என மோடி பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள் தான் நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம். நாங்கள் நாமமும் போடும் பட்டையும் போடுவோம்.  

இரண்டு நாட்களில் முக்கிய தகவல்

100 சதவீதம் கோவிலை கட்டிய பிறகு தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என  சட்டம் சொல்கிறது. ஆனால்  கட்டிட பணி முடியாமலே ராமர் கோவிலை திறந்து வைத்தர் மோடி, கோவிலை கட்டுவதுதான் காங்கிரசை வழக்கம் ஆனால் இடிப்பது காங்கிரஸின் வழக்கமல்ல என கூறினார். நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில்  கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தடவியல் நிபுணர்களோடு தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு குறித்து இரண்டு நாட்களில் முக்கிய தகவல் குறித்து கூறுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம்..!தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுங்கள்- இபிஎஸ்

click me!