விஜயகாந்த் இடத்தை விஜய் சேதுபதி Replace செய்துவிட்டார்... அடுத்த கேப்டன் என புகழ்ந்த பிரபல தயாரிப்பாளர்

First Published Jan 18, 2024, 3:27 PM IST

சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் விஜய் சேதுபதியை அடுத்த கேப்டன் என புகழ்ந்து பேசி இருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்.

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்து உள்ளனர். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக GOAT பட நாயகி மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். இதில் லால், ரோபோ சங்கர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், இன்று இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள்.... Bigg Boss 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்... Bulk தொகையுடன் வெளியேறிய டாப் 5 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் டி சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் டி சிவா, தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்கான இலக்கணத்தை உடைத்தவர் விஜய் சேதுபதி. அவருடைய எளிமை பண்பில் அவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார். அவங்கவங்க நடிச்ச பட புரமோஷனுக்கே ஹீரோக்களை போராடி கூட்டிகிட்டு வர நிலையில், இன்னொரு பட புரமோஷனுக்காக இவ்வளவு பிசி ஷெட்யூலிலும் இங்க வந்திருப்பதற்கு மொத்த தமிழ் திரையுலகம் சார்பாக நன்றி தெரிவிச்சிக்கிறேன்.

விஜயகாந்தை பற்றி யார் சொன்னாலும், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனுஷன் என்று தான் முதலில் சொல்வார்கள். கடைசி வரை அது தொடர்ந்தது. அதேமாதிரி, தற்போது விஜய் சேதுபதி என்றால் நல்ல மனுஷன் என்கிற பெயர் வந்துகொண்டே இருக்கிறது. உருவத்திலும் சரி, குணத்திலும் சரி விஜயகாந்த் இடத்தை விஜய்சேதுபதி Replace செய்துவிட்டார். தமிழ் சினிமாவில் அதிக கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியாக தான் இருப்பார். யார் கேட்டாலும் நோ சொல்லாமல் உதவுவதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் பேசினார்.

இதையும் படியுங்கள்.... உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக பொங்கி எழும் மாயா! முடிவை தீர்மானிக்க போகும் மக்கள் - ஜீ தமிழின் அடுத்த அதிரடி!

click me!