Shukra Peyarchi :ஜூன் 22ல் கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிக்கு அதிர்ஷ்டமானதாக இறுக்கப் போகுதாம்..

First Published Jun 5, 2022, 4:00 PM IST

Shukra Peyarchi 2022 Palangal: சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

shukra peyarchi 2022

ஜூன் 22: சுக்கிரன் பெயர்ச்சி...

ஆடம்பர வாழ்க்கை, பொருள் இன்பத்தின் காரணியான சுக்கிரன் கிரகம் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்துசேரும். 

ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் இது சிலருக்கு சுப பலன்களை தரும். சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரும். அப்படி, யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
 

shukra peyarchi 2022

ரிஷபம்:

சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். வருமானம் அதிகரிக்கும். திருமண யோகம் கை கூடும். உங்கள் விருப்பங்களில் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தால், இந்த நேரத்தில் அது நிச்சயமாக நிறைவேறும். தொழிலில் மந்த நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும். 

shukra peyarchi 2022

மகரம்:

இந்த காலகட்டத்தில் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். தொழிலில் கௌரவமும் உயரும். போட்டித் தேர்வை எழுதினால், அதிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. . நீண்ட நாட்களாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், இருந்தால் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.
 

shukra peyarchi 2022

விருச்சகம்:

சுக்கிரன் பெயர்ச்சி, இந்த நேரத்தில் நிதி வாழ்க்கையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பல சிறந்த முடிவுகளைப் பெற வாய்ப்பு உள்ளது. சில நல்ல செய்திகளையும் பெறலாம். விருச்சிக ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக்கிடந்த விஷயம் நிறைவேறும்.

shukra peyarchi 2022

கும்பம்:

சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும்.வேலையில் வெற்றி உண்டாகும். தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.நீண்ட பயணங்கள் மேற்கொள்ளப்படும். உங்கள் தொலைதூர பயணம் வெற்றியடையும்.

மேலும்  படிக்க ....Guru Peyarchi: குருவின் அருளால் அடுத்த ஒரு வருடம் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்....உங்கள் ராசி இதில் இருக்கா..?

click me!