விடுதலை நான் நடிக்க வேண்டிய படம்... வெற்றிமாறன் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்தது ஏன்? - சீமான் விளக்கம்

First Published Mar 14, 2024, 8:37 AM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக சீமான் கூறி இருக்கிறார்.

seeman

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் வெற்றிமாறன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை. அப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். மேலும் பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், சேத்தன், இளவரசு, ராஜீவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

Vetrimaaran, Seeman

கடந்த ஆண்டு திரைக்கு வந்த விடுதலை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதை விட பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். முதல் பாகம் முழுவதும் சூரியை மையப்படுத்தியே கதையை நகர்த்திய வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளாராம்.

இதையும் படியுங்கள்... தனுஷ் யார் மகன்? உரிமை கொண்டாடிய மதுரை தம்பதி! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Seeman Refuse to act in Viduthalai

நடிகர் விஜய் சேதுபதி விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டரில் முதன்முதலில் நடிக்க கமிட் ஆனது பாரதிராஜா தான். உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் விஜய் சேதுபதியை அவருக்கு பதில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். முதலில் 10 நாட்கள் நடிக்க கால்ஷீட் வாங்கிய வெற்றிமாறன், தற்போது அவரை வைத்து 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்திவிட்டாராம்.

Vijay sethupathi replace Seeman

அந்த அளவுக்கு பெருமாள் வாத்தியாரின் கேரக்டரை மெருகேற்றி இருக்கிறார் வெற்றி. இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் கேரக்டரில் நடிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் இயக்குனர் வெற்றிமாறன் அணுகிய தகவல் வெளிவந்துள்ளது. இதனை சீமானே சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் தாடி வைக்க மாட்டேன் என சொன்னதாலும் வேறு சில காரணங்களாலும் சீமான் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

இதையும் படியுங்கள்... Sneha Photos: தன்னுடைய கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சினேகா! வைரலாகும் போட்டோஸ்!

click me!