rain asianet news
தமிழகத்தில் கோடை மழை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
Rain
இடி மின்னலோடு மழை
இன்று 13.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் நாளையும் மழை
நாளை 14,05,2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.