School College Holiday: குட்நியூஸ்.! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

First Published Apr 16, 2024, 8:13 AM IST

சமயபுரம் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Samayapuram Mariamman Temple

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது பழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் உலக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. 

School College Holiday

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஆகையால் இன்றைய தினம் அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trichy District Collector Pradeep Kumar

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழா இன்று நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. அத்தியாவசிய பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.

School Working day

மேலும் உள்ளூர் விடுமுறை நாளான இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக  இருக்கும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

click me!