Samantha : உள்ளாடை தெரிய உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா... டிரெண்டாகும் சம்முவின் செம்ம ஹாட் போட்டோஸ்

First Published Mar 24, 2024, 9:55 AM IST

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, தற்போது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Samantha

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சமந்தா. அப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து டோலிவுட்டிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த பாணா காத்தாடி திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. இதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சமந்தா.

samantha Ruth prabhu

விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த கத்தி, மெர்சல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைந்ததால் நடிகை சமந்தாவுக்கு கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் செம்ம டிமாண்ட் நிலவியது. உச்ச நடிகையாக வலம் வரும்போதே நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா. காதல் திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. திருமணமான 4 ஆண்டுகளில் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சமந்தா.

இதையும் படியுங்கள்... விவாகரத்துக்கு பிறகு இதுவே முதன்முறை.. ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. ஆனால்..

Samantha Photoshoot

நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சு ரூட்டுக்கு திரும்பிய சமந்தா புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடி அசர வைத்தார். பின்னர் அவருக்கு கோலிவுட் டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், மயோசிட்டிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு அவரின் சினிமா கெரியருக்கு ஸ்பீடு பிரேக்கராக அமைந்தது. அதன் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் சமந்தா.

samantha latest Viral Photos

சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தற்போது உள்ளாடை தெரிய உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் செம்ம வைரலாகி வருகிறது. ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமந்தாவின் போட்டோஷூட் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மணிரத்னம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு.. நோ சொல்லிய சூர்யா தங்கச்சி பிருந்தா- காரணம் என்ன?

click me!