Samantha mother pic: அழகில் நடிகை சமந்தாவை மிஞ்சும் அவரது அம்மா..? முதல் முறையாக வெளியான கியூட் போட்டோ...

First Published May 18, 2022, 1:50 PM IST

Samantha mother pic: நடிகை சமந்தா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட இரண்டு அழகான புகைப்படங்கள், இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 

samantha

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீப காலமாக, இவரின் மார்க்கெட் கொடி கட்டி பறக்கிறது. விளம்பரங்கள், ஒர்க் அவுட், போட்டோ ஷுட் என எது செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

samantha

தமிழ் சினிமாவில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அடுத்தடுத்து, தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து  ஹிட் கொடுத்தவர். இன்று பான் இந்தியா நடிகையாக வளர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.

samantha

சமீபத்தில், சமந்தாவின் நடிப்பில் வெளியான' காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான நாள் முதல், தமிழ் இளசுகள் நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு, சமந்தா பீவர் பிடித்து போய் திரிகின்றனர். 

samantha

இந்த படத்தையடுத்து, சமந்தா தற்போது விஜய் நிர்வானா இயக்கத்தில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் நடிக்கிறார். குஷி என பெயரிட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்ள கூட சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது.

samantha

இது தவிர தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா, தெலுங்கில் யசோதா, சகுந்தலம், ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர், ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். 

samantha

தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதிததுள்ள சமந்தா, அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்குவர். 
 

samantha

ஷூட்டிங் தளத்திலும், வேர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்த, வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலானது. இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா அவரது அம்மாவுடன், இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

samantha

இந்த புகைப்படத்தை சமந்தாவின் ரசிகர்கள் சிலர் அன்னையர் தின ஸ்பெஷலாக தனது இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் அழகிற்கு அவரது அம்மா தான் முக்கிய காரணம் என்று பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க....Don Box Office: டான் திரைப்படம் 100 கோடி வசூல்..? அஜித், விஜய் வரிசையில் இணையும் சிவகார்த்திகேயன்...

click me!