டிஆர்பி-யில் குக் வித் கோமாளியை காலி பண்ண ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் களமிறங்கும் லெஜண்ட்

First Published Apr 30, 2024, 9:35 AM IST

சன் டிவியில் வெங்கடேஷ் பட் தலைமையில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் லெஜண்ட் நடிகர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளாராம்.

Top Cooku Dupe Cooku

விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டில் ஜெயித்தனர். கடைசியாக நடந்து முடிந்த நான்காவது சீசனில் மைம் கோபி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் பல்வேறு மாற்றங்களுடன் கடந்த வாரம் தொடங்கியது.

Sun TV Top Cooku Dupe Cooku Show

அதன்படி மிகப்பெரிய மாற்றமாக, கடந்த நான்கு சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை களமிறக்கி உள்ளனர். இதுதவிர இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக தயாரித்து வந்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனமும் இந்த முறை வெளியேறி இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குனர் பார்த்திவ் மணியும் இந்த முறை விலகி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Vaadivaasal : வாடிவாசல் வருமா? வராதா? மெளனம் காக்கும் சூர்யா... மனம்திறந்த வெற்றிமாறன்

Top Cooku Dupe Cooku show update

இப்படி பல்வேறு மாற்றங்களுடன் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் எபிசோடு பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலானோர் வெங்கடேஷ் பட்டை மிஸ் பண்ணுவதாக கூறி வந்தனர். அவர்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ் கொடுக்கும் வகையில் மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் வெங்கடேஷ் பட். விஜய் டிவியில் இருந்து வெளியேறிய கையோடு சன் டிவியில் இணைந்த வெங்கடேஷ் பட், அதில் டாப் குக் டூப் குக் என்கிற குக்கிங் ஷோவை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

Vadivelu in Top Cooku Dupe Cooku

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த ஜிபி முத்து, பரத், மோனிஷா, தீபா ஆகியோரும் இந்த டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதை புரோமோ மூலம் உறுதி செய்தனர். இந்நிகழ்ச்சியை குக் வித் கோமாளிக்கு இணையாக பிரபலப்படுத்தும் விதமாக இதில் காமெடி லெஜண்டான நடிகர் வடிவேலுவை களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். தற்போது அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். இது மட்டும் உறுதியானால் டிஆர்பி-யில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளியை உறுதியாக காலி செய்துவிடும் என்பது மட்டும் உறுதி.

இதையும் படியுங்கள்... வாய மூடிட்டு இருக்கனும்; இனி இளையராஜாவை பத்தி பேசுனா அவ்வளவுதான்- வைரமுத்துவுக்கு வார்னிங் கொடுத்த கங்கை அமரன்

click me!