பக்தர்களின் கவனத்திற்கு! பழனி முருகன் கோயிலுக்கு போறீங்களா? அப்படினா கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

First Published Apr 28, 2024, 7:55 AM IST

பழனி முருகன் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 29ம் தேதி  ரோப்கார் சேவை ரத்து செய்யப்படுவதாக என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Palani Murugan Temple

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Rope Car

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க: அடேங்கப்பா! சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை லட்சமா? 1.887 கிலோ தங்கம்! 2.527 கிலோ வெள்ளி!

Rope car service cancelled

அதன்படி ஏப்ரல் 29ம் தேதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரோப்கார் சேவை அன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  எனவே பக்தர்கள் மின்இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!