டப்பிங் யூனியன் தேர்தல்... பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் தலைவர் ஆனார் ராதா ரவி

First Published Mar 18, 2024, 12:31 PM IST

சென்னையில் நேற்று நடைபெற்ற டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்ற நடிகர் ராதா ரவி மீண்டும் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

radha ravi

தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். நடிகர் விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களித்தனர். இதில் ராதாரவி, ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

radha ravi Won Dubbing union election

இந்த தேர்தலில் மொத்தம் 1017 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் நடிகர் ராதா ரவிக்கு 662 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு 349 வாக்குகளும், சற்குணத்திற்கு 36 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன்மூலம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் டப்பிங் யூனியன் தலைவர் ஆனார் ராதா ரவி.

இதையும் படியுங்கள்... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... மிஸ்டர் X படத்துக்காக ஒரே ஆண்டில் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய ஆர்யா

Chinmayi, Radha Ravi

இந்த ஆண்டு டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெறும் முன்னர் நடிகர் ராதா ரவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவரின் தலைமை சரியில்லை என்றும், அவர் பெண்களைத் தரக்குறைவாக பேசுவதாகவும், அவரது ஆதரவாளர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதோடு சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட விவகாரமும் பெரியளவில் பேசப்பட்டது.

Dubbing Union President Radha Ravi

இதனால் டப்பிங் யூனியன் தேர்தலில் ராதா ரவிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கும் விதமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தலைவராகி இருக்கிறார் ராதா ரவி. டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராதா ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... தேர்தல் திருவிழாவால் புதிய படங்கள் திரைக்கு வராதா? சினிமா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..

click me!