அபாரமாக பந்து வீசிய ஹைதராபாத்: கடைசியில் கை கொடுத்த பதோனி, பூரன்: LSG 165 ரன்கள் குவிப்பு!

First Published May 8, 2024, 9:34 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 57ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இறுதியாக லக்னோ பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த 2ஆவது அணியாக லக்னோ மோசமான சாதனை படைத்துள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

அதோடு, பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத மற்றொரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

1000 சிக்ஸர்கள்:

தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோசமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. ஜெயதேவ் உனத்கட் வீசிய 8ஆவது ஓவரில் குர்ணல் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக இந்த சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

மொத்தமாக 2022 ஆம் ஆண்டு 1062 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கேஎல் ராகுல் 29 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இதில், ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 55 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி அடித்ததன் மூலமாக 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது 101 பவுண்டரி விளாசியுள்ளார். இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர், கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, தீபக் கூடா, குர்ணல் பாண்டிய, கிருஷ்ணப்பா கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.

click me!