Rasi Palan : இந்த 5 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ரொம்பவே கஞ்சத்தனமானவர்கள்!

First Published May 8, 2024, 9:30 PM IST

சிலர் எவ்வளவு சேமித்து வைத்தாலும் செலவு செய்வதற்கு முன் நூறு முறை யோசிப்பார்கள். ஜோதிடம் படி, இந்த ராசிக்காரர்கள் ரொம்பவே சிக்கனமானவர்கள்.

சிலர் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். அவர்கள் பணத்தை செலவழிக்க ஒருபோதும் அதிகம் சிந்திக்க மாட்டார்கள். ஆனால், ஜோதிடம் படி சில ராசிக்காரர்கள் மிகவும் சிக்கனமானவர்கள். இந்த குணம் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்.  அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்களா.? என்பதை அறிய இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் முதலீடு செய்வதற்கு முன், விஷயங்களை நன்கு ஆராய்ந்து, நன்மை தீமைகளைப் பார்த்த பின்னரே பணத்தை செலவு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பிறருக்கு பணம் கொடுப்பதையும் வெறுக்கிறார்கள். 

மிதுனம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணத்தை செலவழிக்க விரும்பமாட்டார்கள். ஆனால், நண்பர்கள் பணத்தை செலவழித்தால் அதை அனுபவிப்பார்கள். மேலும் இவர்கள் சேமிப்பை செலவழிக்கும் விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள்.

கன்னி: இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் ரொம்பவே சிக்கனமாக இருப்பார்கள். அவர்கள் பண விஷயத்தில் எல்லாவற்றையும் கணக்கிடுகிறார்கள். மேலும், அவர்களின் பணம் எங்கே போனது என்று கண்காணிக்கிறார்கள். 

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள்  தங்கள் பணத்தை செலவழிக்க விரும்புவதில்லை. நண்பர்களுடன் வெளியில் சென்றால் செலவழிக்க தயங்குவார்கள். இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைப் பூட்டிவிட்டு அதைத் தொடவே மாட்டார்கள்.

மகரம்: தேவையற்ற செலவினங்களில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் இவர்கள் நல்ல முன்மாதிரிகள். மேலும், இவர்கள் 
அதிக பணம் செலவழித்து தங்கள் அந்தஸ்தை எப்படி காட்டுகிறார்கள் என்று வெறுப்படைகிறார்கள்.

click me!