27 வயசுலயே இத்தனை கோடி சொத்துக்களா? சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth இதோ

First Published Mar 6, 2024, 12:15 PM IST

பான் இந்தியா நாயகியாக ஜொலித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Rashmika Mandanna

கர்நாடகாவை சேர்ந்தவரான ராஷ்மிகா கடந்த 2016-ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதும் அப்படியே டோலிவுட் பக்கம் ஒதுங்கிய ராஷ்மிகாவுக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

pushpa 2 heroine Rashmika

கீதா கோவிந்தம் படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வெளிவந்த டியர் காம்ரேட் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் ராஷ்மிகாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதன்பின்னர் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார் ராஷ்மிகா.

Rashmika Movie Line Up

டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ராஷ்மிகா. தமிழில் முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்த படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கி கோலிவுட்டிலும் மர்க்கெட்டை பிடித்தார். தற்போது தமிழில் இவர் கைவசம் ரெயின்போ என்கிற படமும் உள்ளது. இதுதவிர இந்தியிலும் ராஷ்மிகாவுக்கு செம்ம டிமாண்ட் நிலவி வருகிறது. இதற்கு காரணம் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு பின் ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... பாத் டவல் போல் இருக்கும் கிக்கான உடையில்... ஓப்பேன் வேறையா? கிளாமர் காட்டி இளசுகளை வெறியேற்றும் ராஷ்மிகா!

Rashmika Salary

இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் கைவசம் தற்போது தமிழில் 2 படங்களும், தெலுங்கில் 2 படங்களும், இந்தியில் 3 படமும் உள்ளன. பட வாய்ப்பு வரிசைகட்டி நிற்பதால், படத்துக்கு படம் சம்பளத்தையும் அதிகரித்த வண்ணம் உள்ளார் ராஷ்மிகா. கடந்தாண்டு வரை ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த ராஷ்மிகா, இந்தியில் பிசியானதும் தன் சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி உள்ளார்.

Rashmika mandanna Net Worth

இப்படி 27 வயதிலேயே கோடீஸ்வரியாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு சொந்தமாக பெங்களூரு, கூர்க், கோவா, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீடுகளும் உள்ளன. இதில் பெங்களூருவில் ராஷ்மிகாவுக்கு சொந்தமாக உள்ள சொகுசு வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.8 கோடி இருக்குமாம். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விளம்பரங்கள் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.45 முதல் ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Rashmika Mandanna Car Collection

கார்களின் மீதும் அலாதி பிரியம் கொண்ட ராஷ்மிகா, ஏராளமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவரின் கராஜில் டொயோட்டா இனோவா, ஆடி Q3, மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஹுண்டாய் கிரிட்டா உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் அதிநவீன அம்சங்கள் நிறைந்த ஜெர்மன் SUV காரான ஆடி Q3-ஐ தான் ராஷ்மிகாவின் பேவரைட் காராம் இதைதான் அவர் அதிகம் பயன்படுத்துவார். அதுமட்டுமின்றி சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் தான் அதிகளவில் முதலீடு செய்து வருகிறாராம் ராஷ்மிகா.

இதையும் படியுங்கள்... Rashmika: இந்தியால மட்டும் இன்றி.. ஜப்பான்ல கூட ராஷ்மிகாவுக்காக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்! வைரலாகும் வீடியோ!

click me!