இனவெறிக் கருத்து சர்ச்சை.. வலுத்த எதிர்ப்பு.. ராஜினாமா செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாம் பிட்ரோடா..

By Raghupati R  |  First Published May 8, 2024, 7:45 PM IST

இனவெறிக் கருத்து தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய சர்ச்சை கருத்துக்கள் பேசுபொருளாகி உள்ளது. சாம் பிட்ரோடா  பேசியதாவது, “இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போன்றவர்கள். மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போன்றவர்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றவர்கள்.

தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள். இருப்பினும் நாம் அனைவரும் சகோதரி சகோதர்கள்” என்று கூறினார். இந்தியர்களின் நிறம் குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்து இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் பிட்ரோடா, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவரது முடிவை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக்கொண்டார். பதட்டமான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து விலகிக் கொண்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது கட்சிக்கு எதிரான கோபத்தைக் குறைக்க முன்வந்தார் என்றே சொல்லலாம்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது" என்று கூறியிருந்தார்.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

click me!