முழு சார்ஜில் 170 கிமீ பேமிலியாக சுற்றலாம்.. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய iVOOMi..

First Published May 8, 2024, 7:04 PM IST

இந்திய வாகன சந்தையில் ஐவூமி எனர்ஜி தனது புதிய மின்சார ஸ்கூட்டரான iVOOMi JeetX ZE ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழு சார்ஜில் 170 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

iVOOMi JeetX ZE

ஐவூமி ஜீட்எக்ஸ் ஜிஇ (JeetX GE) என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுபாடுகள் 2.1kWh, 2.5kWh மற்றும் 3kWh பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன.

iVOOMi

அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,999 இல் தொடங்குகிறது. கிரே, ரெட், கிரீன், ரோஸ், கோல்ட், ப்ளூ, சில்வர் மற்றும் பிரவுன் ஆகிய 8 வண்ணத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. JeetX GE இன் முன்பதிவு மே 10 முதல் தொடங்கும்.

iVOOMi Electric Scooter

அதன் நீளம் 760 மிமீ, இருக்கை உயரம் 770 மிமீ மற்றும் வீல்பேஸ் 1350 மிமீ. அதன் இருக்கை மிகவும் பெரியது ஆகும். நீண்ட தூர பயணங்களுக்கு சௌகரியம் மற்றும் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்குவதாக கூறப்படுகிறது.

Electric Vehicles

எல்லாவற்றிற்கும் மேலாக, இது பெரிய லெக்ரூம் மற்றும் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. அதில் மக்கள் தங்களுக்குத் தேவையான நிறைய பொருட்களை வைத்திருக்க முடியும்.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!