நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜப்பானில் நடைபெற உள்ள க்ரஞ்சி ரோல் அனிம் விருது விழாவில் கலந்து கொள்ள சென்றபோது ஜப்பான் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு வீடியோ வைரலாகி வருகிறது. 

பான் இந்தியா அளவில் படு பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில், தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த, 'அனிமல்' திரைப்படம்... ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த போதும், பாக்ஸ் ஆபிசில் ரூபாய் 900 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்... டூப்பர் வெற்றி பெற்ற, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், 'புஷ்பா தி ரூல் படத்தில்' நடித்து வந்தார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக 2022-ஆம், ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது.

Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்

மேலும் தற்போது தமிழில் ரெயின்போ, இந்தியில் இரண்டு புதிய படங்கள், தெலுங்கில் தனுஷ் ஜோடியாக அவரது 51-ஆவது படம் என, ரெஸ்ட் இல்லாமல் நடித்து வரும் ராஷ்மிகா... அடிக்கடி விருது விழாக்கள் மற்றும் விதவிதமான போட்டோ ஷூட் போன்றவற்றை எடுத்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்தாரா இயக்குனர் பாலா.. படத்தை விட்டு விலக காரணம் இது தான் நடிகை மமிதா பைஜூ விளக்கம்!

அதன்படி டோக்கியோவில், நடைபெற உள்ள க்ரஞ்சி ரோல் அனிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டார். டோக்கியோ வந்து இறங்கிய ரஷ்மிகாவை... ஜப்பான் நாட்டை சேர்ந்த அவரது ரசிகர்கள், புஷ்பா பட ஸ்ரீவள்ளியின் புகைப்படத்தோடு வரவேற்று தங்களின் அன்பை பொழிந்தனர். தற்போது இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. க்ரஞ்சி ரோல் அனிம் விருது விழாவில், கலந்து கொள்ளும் இந்தியாவின் முதல் பிரபலம் ராஷ்மிகா என்பதும், இவரும் நாளை ஒரு விருதை வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…