யார் அந்த நிர்மலாதேவி? தமிழகத்தை அதிரவைத்த வழக்கு.. 7 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு வெளியாகிறது.!

First Published Apr 26, 2024, 8:52 AM IST

7 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்து தமிழகத்தை அதிர வைத்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

Professor Nirmala Devi

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக நிர்மலா தேவி பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்லாமல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இந்நிலையில், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

College student

இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

CBCID

இந்த வழக்கில் இன்னும் பலர் சிக்குவார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி  ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

Professor Nirmala Devi Case Judgement

இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி இறுதி கட்ட வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார். நிர்மலா தேவிக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. 

click me!