Pranitha Subhash: குட் நியூஸ் சொன்ன சூர்யா, கார்த்தி பட ஹீரோயின்...கணவரின் பிறந்தநாளில் கிடைத்த வரம்...

First Published Apr 11, 2022, 11:54 AM IST

Pranitha Subhash: சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன்ஜோடியாக நடித்த பிரனீதா சுபாஷ், தான் கர்ப்பமாக இருப்பதாக தற்போது பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

pranitha-subhash

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான உதயன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். 

pranitha-subhash

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வர, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து கவனம் பெற்றார்.

pranitha-subhash

இவர் தமிழ் மட்டுமின்றி,  தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, பிரணிதா சுபாஷு பூஜ் தி பிரைட் ஆஃப் இந்தியா படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கிறார். 

pranitha-subhash

இவர் கடைசியாக அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தவர். இதையடுத்து, தமிழ் சினிமாவில் சிறிது காலம் இடைவெளி எடுத்து இருக்கிறார். 

pranitha-subhash

 
இதையடுத்து, இவர் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த ஆண்டு மே 31 ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

pranitha-subhash

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களது திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

pranitha-subhash

இதையடுத்து, தனது திருமணத்தை உறுதி செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள் வெளியிட்டு, கொரோனா வைரஸ் காரணமாக அனைவரையும் அழைக்க முடியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

pranitha-subhash

இந்நிலையில், தற்போதைய செய்தி என்னவென்றால், தற்போது பிரனீதா சுபாஷ் கர்ப்பமாக உள்ளாராம். ஆம், அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தற்போது பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

pranitha-subhash

மேலும், பிரனீதா சுபாஷ் அந்த பதிவில் , என் கணவரின் 34வது பிறந்தநாளான இன்று கடவுள் எங்களுக்கு தந்த வரம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது, புகைப்படம் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

click me!