இது வீடா? இல்ல அரண்மனையா? பிஆர் சுந்தரின் சொகுசு பங்களாவின் விலை இத்தனை கோடியா?

First Published Apr 27, 2024, 4:45 PM IST

பி.ஆர். சுந்தரின் ஆடம்பர சொகுசு பங்களாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பங்கு சந்தையில் இருப்பவர்களுக்கும், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பங்குகள், முதலீடு தொடர்பான பதிவுகளை பார்ப்பவர்களுக்கும் பி.ஆர். சுந்தரை பற்றி தெரிந்திருக்கும். பங்குச்சந்தை நிபுணர், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிறார்.

மேலும் தனது யூ டியூப் சேனலில் பங்குச்சந்தை, முதலீடு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் சேனலில் மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரின் வீடியோக்களுக்கும் லட்சக்கணக்கான வியூஸ் கிடைக்கின்றன.

30 ஆண்டுகளுக்கு முன்பு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கிய அவர் பல சறுக்கல்களை சந்தித்து பின்னர் நல்ல வருவாய் ஈட்டி உள்ளார். இதன் மூலம் இன்று கோடீஸ்வரராக மாறி உள்ளார் பி.ஆர் சுந்தர். 

இந்த நிலையில் பி.ஆர். சுந்தரின் ஆடம்பர சொகுசு பங்களாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 8500 ச.அ பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்படுள்ள அவரின் பங்களாவில் நீச்சல் குளம், வீட்டிற்குள்ளேயே லிஃப்ட், 5 படுக்கையறை, பார்ட்டி ஹால், 8 பேர் அமரும் வகையில் மினி தியேட்டர் என பல சகல வசதிகளுடன் உள்ளது.

இந்த வீட்டின் பால்கனி மட்டுமே 1500 அடியில் உள்ளதாம்.  இவரின் வீட்டில் இருந்தே மெரினா கடலை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற 4 வீடுகள் உள்ளதாகவும், தனது ஆடம்பர வீட்டின் விலை ரூ.50 கோடி என்றும் பி.ஆர் சுந்தர் தெரிவித்துள்ளார். நடிகரும், த.வெ.க கட்சி தலைவருமான விஜய்யின் வீட்டின் அருகே தான் இவரின் வீடு அமைந்துள்ளதாம்.

click me!