பழனி முருகன் கோயிலில் 12 நாட்களில் நிரம்பிய உண்டியல்! அள்ள அள்ள தங்கம்! குவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

First Published Jun 25, 2024, 8:05 AM IST

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகையால் 12 நாட்களில் நிரம்பியதை  தொடர்ந்து  உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.2 கோடியை நெருங்கியது.

Palani Murugan Temple

அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

Palani Murugan Temple Undiyal

இந்நிலையில், பழனி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் வருகையால் 12 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து நேற்று மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  இதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் ஒரு கோடியே 94 இலட்சத்து 17 ஆயிரத்து 84 ரூபாயும், தங்கம் 622 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 382 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல்,  தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 

இதையும் படிங்க: சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!

Murugan Temple

இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Latest Videos

click me!