சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!
ஜூன் 30 அன்று சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் சுப பலன்கள் பெறப் போகிறார்கள்.

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது அந்த வகையில், ஜூன் 30, 2024 அன்று நள்ளிரவு 12:30 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சனி பகவான் 139 நாட்கள் அதாவது, நவம்பர் 15 வரை பிற்போக்கு நிலையில் இருப்பார். ஜோதிட கணக்கின்படி சனியின் தலைகீழ் இயக்கம் காரணமாக சில ராசிக்காரர்கள் மிகவும் சுப பலன்கள் பெறப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் மிகுந்த மரியாதையை பெறுவார்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சனி உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
ரிஷபம்: சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் தொழில் மிகவும் சாதகமாக இருக்கும். அரசு பணிகளில் சிறப்பான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நவம்பரில் நீங் பெரிய வெற்றிகளை பெறலாம். இது முன்பை விட உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களது செல்வம் அதிகரிக்கும்.
சிம்மம்: சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் நீங்கள் பெரிய வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களது தடைபட்ட வேலைகள் முடியும். உங்களது பணம் எங்காவது சிக்கியிருந்தால் நீங்கள் அதை திரும்ப பெறுவீர்கள்.
இதையும் படிங்க: சனி பகவானுக்கு பிடித்த ராசி இவர்கள் தான்: இவர்களை கைவிட மாட்டார்.. அருள் மழை பொழிவார்!
தனுசு: சனியின் சஞ்சாரத்தால் உங்களது வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஆதிக்கம் பணியிடத்தில் கூடும். நீங்கள் செய்யும் பணிகள் பாராட்டப்படும். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் இருக்கும். சனி பகவானின் ஆசியை முழுமையாக பெறுவீர்கள்.
இதையும் படிங்க: சனிக்கிழமையன்று இந்த இரண்டு நிற ஆடைகளை அணியாதீங்க... சனி பகவானுக்கு கோபம் வரும்.. ஜாக்கிரதை!!
மகரம்: சனியின் சஞ்சாரத்தால் உங்கள் நிதிநிலை முன்பை விட மிகவும் வலுவாக இருக்கும். உங்களது வங்கிக் கணக்கில் பணம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்து வாங்கும் நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் சுகபோகங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள். இந்த காலகட்டம் காதல் உறவுக்கு சாதகமாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D