மாணவர்களுக்கு குட் நியூஸ்.. சட்டக்கல்லூரியில் சேரப்போறீங்களா.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jun 25, 2024, 8:01 AM IST

தமிழகத்தில் உள்ள ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்புகளில் தலா 40 மாணவர்கள் வீதம் மொத்தம் 480 மாணவர்களை இந்த ஆண்டு முதல் கூடுதலாக அனுமதிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். 
 


சட்டக்கல்லூரியில் கூடுதல் இடங்கள்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை மீதான விவாதத்திற்கு பின் அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வேலூர். விழுப்புரம். தருமபுரி. இராமநாதபுரம், சேலம், தேனி ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2024-2025- கல்வியாண்டு முதல் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் முதலாமாண்டு சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 80-லிருந்து 120 ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் 240 மாணவர்களும் ஆக மொத்தம் 480 மாணவர்கள் அரசு சட்டக் கூடுதலாககல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் என கூறினார். 

Tap to resize

Latest Videos

EPS Vs KC Palanisamy: என்னை பற்றியா அவதூறா பேசுற.. இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு!

புதிய படிப்புகள் அறிமுகம்

பட்டறைப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 5 ஆண்டு சட்டப் படிப்பும், புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் புதிதாக 3 ஆண்டு சட்டப் படிப்பும் 2024-2025-கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அதேபோல தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் சொத்துரிமைச் சட்டம் மற்றும் குற்றம் மற்றும் தடயவியல் சட்டம் ஆகிய இரு முதுகலை சட்டப்படிப்புகள் 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களை திறக்க அரசு தயாராக உள்ளது இருப்பினும் நிதி பற்றாக்குறை காரணமாக புதிய நீதிமன்றங்கள் திறக்க முடியாத சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் முடிஞ்சிருச்சு... கேஸ் சிலிண்டர் மானியம் இன்னும் எவ்வளவு நாளைக்கு... மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

click me!