சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் மகளை சினிமாவில் நடிக்க அனுமதிக்காமல் இருந்தார் சரத்குமார். இதன்காரணமாக பாய்ஸ், காதல் போன்ற பிரம்மாண்ட பட வாய்ப்புகளை நழுவவிட்டார் வரலட்சுமி. பின்னர் அப்பா ஓகே சொன்னதால் சிம்புவின் போடா போடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் வரலட்சுமியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
25
Varalaxmi, Nicholai Sachdev
தொடர்ந்து ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் வரலட்சுமி நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த மாரி 2, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உடல் எடை அதிகரித்திருப்பது அவரின் கெரியருக்கு ஒரு மைனஸாக இருந்த நிலையில், அதை சரிசெய்ய குறுகிய காலகட்டத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார் வரலட்சுமி.
இதையடுத்து கோலிவுட்டை காட்டிலும் டோலிவுட்டில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரிசைகட்டி வருகின்றன. அங்கு வில்லி கேரக்டர் என்றால் வரலட்சுமி தான் என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் வரு. இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வந்த வரலட்சுமிக்கு தற்போது 39 வயது ஆகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய நீண்ட நாள் காதலனை அறிமுகப்படுத்திய கையோடு அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
45
Varalaxmi Sarathkumar engagement
வரலட்சுமியின் வருங்கால கணவர் பெயர் நிக்கோலாய் சச்தேவ். மும்பையை சேர்ந்தவரான இவர், அங்கு ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர், கடந்த 2010-ம் ஆண்டே கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிக்கோலாய்க்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. முதல் மனைவி உடனான திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து நடிகை வரலட்சுமி உடன் நிக்கோலாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
55
varalaxmi sarathkumar Fiance nicholai sachdev Net Worth
வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடிக்கு வருகிற ஜூலை 2ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம். இதைத்தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. வரலட்சுமி கோடிக்கணக்கிலான சொத்துக்கு சொந்தக்காரியாக இருந்தாலும் அவரது வருங்கால கணவர் நிக்கோலாய்யும் அவரை விட பணக்காரராம். அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.