மாமன்னன் படத்தில் நடிக்க மாரி செல்வராஜின் பர்ஸ்ட் சாய்ஸ் வடிவேலு இல்லையாம்... இந்த டக்கரான நடிகர் தானாம்!

First Published Feb 18, 2024, 4:09 PM IST

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vadivelu, Mari selvaraj

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரின் காமெடிகளுக்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது என சொல்லும் அளவுக்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலுவை பார்த்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு பலரை சிரிக்க வைத்து இன்று வைகைப்புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக காமெடியில் கலக்கும் வடிவேலு, மாமன்னன் படத்தில் சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

maamannan Movie

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் வடிவேலுவுக்கு ஒரு சீனில் கூட காமெடி பண்ண இடமே கொடுத்திருக்கமாட்டார் மாரி செல்வராஜ். வடிவேலுவின் இந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. அவரின் காமெடியான முகத்தையும் சீரியஸாக காட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டினார் மாரி. அவரின் ஆசைக்கு ஏற்ப தன்னுள் இருக்கும் நடிகனை வெளிக்கொண்டு வந்து கைதட்டல்களையும் வாங்கினார் வடிவேலு.

இதையும் படியுங்கள்... கோடியில் இருந்து லட்சத்துக்கு சரிந்த வசூல்; ஒரே வாரத்தில் ரஜினியின் லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

udhayanidhi Stalin, Vadivelu

மாமன்னன் படத்தின் சீரியஸ் ஆன ரோலில் நடித்த பின்னர் தனக்கு அதுமாதிரி கதாபாத்திரங்களே வருவதாக வடிவேலு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் அதில் தனக்கு கதை புடித்திருந்தால் மட்டுமே அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்பதையும் தெளிவுபட கூறி இருந்தார் வடிவேலு. ஆனால் உண்மையில் மாமன்னன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுவே இல்லையாம். அதற்கு மாரி செல்வராஜின் மைண்டில் இருந்தது வேறு ஒரு நடிகர்.

charlie

அவர் வேறுயாருமில்லை நடிகர் சார்லி தான். சார்லியை தான் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம் மாரி செல்வராஜ். ஆனால் வடிவேலுவிடமும் ஒரு முறை கேட்டு பார்க்கலாம் என்று சென்று கேட்டபோது அவரும் ஓகே சொல்லிவிட்டதால் சார்லியை தூக்கிவிட்டு வடிவேலுவை நடிக்க வைத்தாராம் மாரி செல்வராஜ். இந்த கதாபாத்திரம் சார்லிக்கும் டக்கராக பொறுந்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்... நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; நூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா மந்தனா

click me!