அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஊத்தப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

First Published May 8, 2024, 7:05 AM IST

அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Chennai Meteorological

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. ஆகையால்,  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Rain

அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Chennai Rain

சென்னை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்திருந்திருந்தது. 

இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain : இந்த 14 மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்! சென்னை வானிலை மையம் அலர்ட்!

Tamilnadu Heavy Rain Alert

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

Tiruvannamalai Heavy Rain

கடந்த ஒரு மணிநேரமாக  திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலால் வெந்து தணிந்து வந்த பொதுமக்களுக்கு இந்த திடீர் மழை இதமான குளிர்ச்சியான சூழலை தந்துள்ளது. அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

click me!