மாடு மேய்க்கணுமா? அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. வீடு தேடி வந்த சூப்பர்ஹிட் படவாய்ப்பை நழுவவிட்ட உதயநிதி

First Published Apr 28, 2024, 11:44 AM IST

கதை பிடித்திருந்தாலும் இயக்குனர் மாடு மேய்க்க சொன்னதால் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

Udhayanidhi Stalin

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் அடித்ததால், முழுநேர ஹீரோவாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல், நெஞ்சுக்கு நீதி, கெத்து, கண்ணே கலைமானே, மனிதன், கலகத் தலைவன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.

Minister Udhayanidhi Stalin

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் திரைக்கு வந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு திரைக்கு வந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் உதயநிதி. தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என உறுதிபட கூறிய அவர் தற்போது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... மலையாள சினிமா தந்த மாஸ்டர் பீஸ் படம்... தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் மாஸ் காட்ட வருகிறது மஞ்சும்மல் பாய்ஸ்

Udhayanidhi Stalin Rejected Movie

இந்த நிலையில், தான் தவறவிட்ட ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் உதயநிதி. அதன்படி அருள்நிதி ஹீரோவாக அறிமுகமான வம்சம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது உதயநிதி ஸ்டாலின் தானாம். அப்படத்தின் கதையை பாண்டிராஜ் முதன்முதலில் உதயநிதியிடம் தான் கூறி இருக்கிறார். அந்த கதை அவருக்கு பிடித்திருந்தாலும், ஒரே ஒரு காரணத்துக்காக அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் உதயநிதி.

Udhayanidhi Stalin First choice for Vamsam Movie

அதன்படி அப்படத்தில் மாடு மேய்க்க வேண்டும் என இயக்குனர் கூறியதும், அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் எனக்கூறி நிராகரித்ததோடு, தன் தம்பி ஒருவன் இருப்பதாகவும், அவன் சினிமாவில் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறி அருண்நிதியை சிபாரிசு செய்திருக்கிறார். அதன்பின்னர் தான் அந்த வாய்ப்பு அருள்நிதிக்கு சென்றுள்ளது. அருள்நிதி நடித்த அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... SK Love : என் லைஃப்ல இருந்த ஒரே லவ்... அதுவும் ஒன்சைடு லவ்- காதல் தோல்வி குறித்து மனம்திறந்த சிவகார்த்திகேயன்

click me!