Ninaithen Vanthaai: அஞ்சலியை பார்க்க ஓடிவந்த சுடர்.. அலேக்காக கடத்திய வேலு - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published Apr 26, 2024, 10:35 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழ் வந்தா தான் சாப்பிடுவேன் என்று அஞ்சலி அடம் பிடிக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, எழில் அஞ்சலியை சாப்பிடு என்று மிரட்டி சாப்பிட வைக்கிறான். மனோகரி இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று வேலுவுக்கு போன் போட்டு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? அதான் சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்திட்டேன்ல அவ கழுத்துல சீக்கிரம் தாலியை கட்டு என்று சொல்கிறாள். 

வேலு சுடரை தேடி போனதையும் அவள் காணாமல் போன விஷயத்தை என் சொல்ல மனோகரி சீக்கிரம் தேடி கண்டுபிடித்து கல்யாணத்தை முடி என்று சொல்கிறாள். அதன் பிறகு சுடர் பாட்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்குகிறது.

10 வருட தவம்.. 2 அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த சீரியல் நடிகை ஜூலி! குவியும் ரசிகர்கள் வாழ்த்து

இங்கே அஞ்சலி இடிக்கு பயந்து எல்லோரையும் எழுப்ப யாரும் எழுந்து கொள்ளாத நிலையில் தமிழ் தமிழ் என சொல்லிக்கொண்டு அம்மாவின் புடவையை எடுத்து வர அது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு வராமல் இருக்க தமிழ் ரூமுக்குள் சென்று ஓரமாக உட்கார்ந்து அழுகிறாள். 

இடி இடிப்பதை பார்த்ததில் தமிழுக்கு அஞ்சலி ஞாபகம் வர, எழில் வீட்டுக்கு ஓடி வந்து வெளியே நின்று அஞ்சலி அஞ்சலி என்று கூப்பிட தமிழின் குரலை கேட்ட அஞ்சலி ஜன்னல் கதவை திறந்து பார்த்து எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள எழில் குழந்தைகள் பயப்படுவார்கள் என்று ரூமுக்கு வர அஞ்சலி காணாமல் போனதை பார்த்து தேடுகிறான். 

Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!

தமிழின் ரூமில் இருக்கும் அஞ்சலி பார்த்த அவன் தமிழ் வெளிய நிற்பதையும் பார்த்து ஜன்னலை சாத்தி அவ கூட எல்லாம் பேசக்கூடாது என்று தமிழை கூட்டிச் சென்று விடுகிறான். இந்த இடைப்பட்ட கேப்பில் வேலு தமிழை அடித்து கடத்தி விடுகிறான். எழில் மீண்டும் ஜன்னல் வழியாக பார்க்க தமிழ் அங்கு இல்லை. 

அடுத்து வேலு தமிழை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Shruti Haasan: லவ் பிரேக்கப் சர்ச்சைக்கு நடுவே... ரணகள கவர்ச்சியில் ஹாட் போட்டோசை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

click me!