என்னா அடி அடிச்சாங்க, அதெல்லாம் மறக்க முடியுமா? SRHஐ பழிதீர்க்குமா MI? டாஸ் வென்று பவுலிங்!

First Published May 6, 2024, 7:24 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 55ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

வான்கடே மைதானத்தில் நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அன்ஷுல் கம்போஜ் இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா, நுவான் துஷாரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், மாயங்க் அகர்வால், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சென், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th IPL 2024 Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 22 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருக்கிறது. வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் 5ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

MI vs SRH, 55th IPL Match

ஒட்டு மொத்தமாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 83 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 51 போட்டிகளில் வெற்றியும், 32 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 8ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடியாக விளையாடி 277/3 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 246/5 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.

click me!