ஒரே ஒரு தோல்வி – இப்படி ஆகிப்போச்சே, பிளே ஆஃப் வருமோ? வராதோ? புலம்பும் லக்னோ!

First Published May 6, 2024, 8:05 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

Lucknow Super Giants

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 10 அணிகளில் எந்தெந்த அணிகள் வெளியேறும், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ளும் நேரம் நெருங்கிவிட்டது.

IPL 2024 Points Table

இதற்காக ஒவ்வொரு அணியும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றன. நேற்று வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நம்பர் 1 இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 4ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது இடத்திலும் இடம் பெற்றிருந்தன.

LSG Playoff Chance

நேற்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோற்க வேண்டும் என்று மற்ற 9 அணிகளும் வேண்டிக் கொண்டன. ஜெயிக்க வேண்டும் சிஎஸ்கே மட்டுமே ஆசைப்பட்டது. கடைசியில் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவே புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது. இது சிஎஸ்கேக்கு முக்கியமான போட்டி.

Lucknow Super Giants

இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சரிந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

LSG Playoffs

இந்த நிலையில், தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் எஞ்சிய 3 போட்டிகளில் லக்னோ 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

IPL Playoffs

இதில், ஏதேனும் ஒன்று அல்லது 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு மற்ற அணிக்கு சாதகமாக அமையும். கடந்த 2 சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!