நடிகர் பவன் கல்யாணுக்கு பிரச்சாரம் செய்யப்போகும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்.. இப்படியொரு உறவா?

First Published Mar 1, 2024, 9:55 PM IST

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்ய வர உள்ளார் மெகா லேடியான நிஹாரிகா.

Niharika Konidela Support Pawan Kalyan

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு. இவர் தமிழில் விழித்திரு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் மகள் நிஹாரிகா. நடிகையான இவர், தமிழில், விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்திருந்தார்.

Niharika Konidela

இந்த நிலையில் இவர் பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு நிஹாரிகா மருமகள் முறை ஆவார். கடந்த 2019 ஆம் ஆண்டு நர்சாபுரத்தில் தனது தந்தை நாகபாபுவுக்காக பிரச்சாரம் செய்த பிறகு, இது அவரது இரண்டாவது அரசியல் வருகையாகும்.

Pawan Kalyan

2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஜனசேனாவுக்காக பிரச்சாரம் செய்தபோது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அவலநிலையை தான் எதிரொலித்ததாகக் கூறியுள்ளார் நிஹாரிகா.

JanaSena Party

மேலும் இந்த ஆண்டும் அதையே செய்ய விரும்புவதாகவும் கூறினார். பாபாவுக்கு அதாவது பவன் கல்யாணுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். 2019 இல் அவருக்கு என்னால் முடிந்த ஆதரவை வழங்கினேன்.

Pawan kalyan party

இந்த ஆண்டும் அதையே மீண்டும் செய்கிறேன். நான் வெளியே சென்று பிரச்சாரம் செய்வேன்.’ என்று நிஹாரிகா கூறியுள்ளார். நிஹாரிகாவின் அண்ணன் நடிகர் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வாக்குகளுக்கு குறிவைக்கும் பிரதமர் மோடி.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்தது ஏன்? வேற மாறி பிளான்..

click me!