என்னது Cult படமா? அனிமல் பட Review சொன்ன திரிஷா.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - டக்குனு என்ன செய்தார் தெரியுமா?

First Published Dec 4, 2023, 9:53 AM IST

Trisha Slammed by Netizens : நடிகை திரிஷா அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் குறித்து வெளியிட்ட கருத்திற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Animal Movie Release

கடந்த டிசம்பர் 1ம் தேதி பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்வீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனிமல். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களாக மிகப்பெரிய வரவேற்புடன் ஓடி வருகிறது. வெளியான மூன்று நாட்களில் இந்திய அளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அனிமல் திரைப்படம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

அஜர்பைஜான் செல்லும் விடாமுயற்சி படக்குழு.. அஜித்துடன் இரண்டாம் முறை இணையும் ஒளிப்பதிவாளர் - அப்டேட் இதோ!

Animal

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருந்தார். அதில் அனிமல் திரைப்படம் ஒரு "Cult" திரைப்படம் என்றும், மிக நேர்த்தியாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை பெற்றுள்ளது.

Latest Videos


Actress Trisha

நெட்டிசன்கள் வெளியிட்ட கருத்தில் சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய திரிஷா. தற்பொழுது அனிமல் திரைப்படத்தை Cult என்று கூறி பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறி தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அவர் போட்ட அந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்து நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!