ஆமா நாங்க Bully Gang தான்... பெருமையாக பதிவிட்ட நிக்சனை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்

First Published Feb 2, 2024, 10:22 AM IST

பிக்பாஸ் வீட்டில் Bully Gang ஆக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி முடிந்தாலும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு இடையேயான பகை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அண்மையில் விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த விசித்ரா, தினேஷ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் கிளம்பி சென்றார்.

BiggBoss B Team

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய மாயா, பூர்ணிமா ஆகியோர் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், இன்னும் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஏ டீம், பி டீம் என தனித்தனியாக பிரிந்து அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

BiggBoss A Team

அந்த வகையில் பிக்பாஸ் பி டீமில் உள்ள விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், டைட்டில் வின்னர் அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் நேற்று வீடியோ கால் வாயிலாக ஒன்றாக பேசிக் கொண்டுள்ளனர். அதன் ஸ்கிரீன் ஷாட்டை பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பிக்பாஸ் ஏ டீம் அதற்கு போட்டியாக தாங்கள் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றனர்.

Nixen insta post

அதன்படி மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா, சரவண விக்ரம், அனன்யா ஆகியோருடன் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிக்சன் அதில் தாங்கள் Bully Gang என்று பெருமையாக பதிவிட்டு இருக்கிறார். இதையடுத்து அவர்களை விமர்சித்து போடப்பட்ட கமெண்ட்டுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக டெலிட் செய்து, தனக்கு ஆதரவாக வரும் கமெண்ட்டுகளை மட்டும் அந்த பதிவில் இடம்பெற செய்திருக்கிறார் நிக்சன். 

இதையும் படியுங்கள்... பைனலில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்ததா? வாய்ப்பே இல்ல... இது கன்பார்ம் மோசடி - புயலை கிளப்பிய பிரபலம்

click me!