Nayanthara: யம்மாடியோவ்..நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்

First Published Jun 12, 2022, 11:25 AM IST

Nayanthara and Vignesh Shivan Property Worth: புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

Nayanthara and Vignesh Shivan

தமிழ் சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் வெளியான அவர்களது திருமண புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Nayanthara and Vignesh Shivan

திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள், அதற்கு விக்னேஷ் சிவன் தற்போது  மன்னிப்பும் கேட்டு விட்டார். இருப்பினும், கோவில் நிர்வாகம் தரப்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Nayanthara and Vignesh Shivan

தொடர்ந்து சென்னை திரும்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, ஏற்கனவே அறிவித்த படி நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் செம டிரெண்டாகி வருகிறது.சமூக வலைத்தளம் முழுவதும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. 

Nayanthara and Vignesh Shivan

இந்த நிலையில், நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்களை அவரது ரசிகர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.  குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் அணிந்திருந்த உடைகள் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.  உதாரணமாக, இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை இவர்கள் திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ஆகிய தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.

Nayanthara and Vignesh Shivan

இந்த நிலையில், தற்போது புதுமண தம்பதிகளான விக்கி - நயன்தாரா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. அதன்படி, இந்திய விமானப் படையில் பணியாற்றியவரின் மகளான நயன்தாரா, ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுபவர்.எனவே,  இவரது சொத்து மதிப்பு ரூ. 71 கோடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும், வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுபவர். அதன்படி, இவரின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க....Nayan: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மூத்தவர் தான்..ஆனால், எத்தனை வயது? கூகுளில் தேடி பார்க்கும் நெட்டிசன்கள்...

click me!