Akshaya Tritiya 2024 : அட்சய திரிதியை உண்மையில் ஏன்  கொண்டாடுகிறோம் தெரியுமா..? முழு விளக்கம் இதோ..

By Kalai SelviFirst Published Apr 30, 2024, 10:33 AM IST
Highlights

அட்சய திரிதியை என்பது, சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருத்தியை நாளை தான், நாம் அட்சய திரிதியை நாளாகக் கொண்டாடுகிறோம்.

இந்த ஆண்டு அட்சய திரிதியை 2024 மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உரிய நாள். இந்த மங்களகரமான நாளில் தான் இந்த 2024 ஆண்டில் அட்சய திரிதியை தினம் வருகிறது. எனவே, இந்தாண்டு அட்சய திருதியை தின மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பொதுவாகவே, 'அட்சய திருதியை' என்றாலே தங்க நகை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். அது தான்  சிறப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இந்த மங்களகரமான நாள் நகை வாங்குவதற்கு மட்டும் சிறப்பு அல்ல. வேறு சிலவற்றையும் அட்சய திருதியை நாளில் வாங்கலாம். அது என்னென்னவென்று இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

அட்சய திருதியை அன்று இவற்றையும் வாங்கலாம்: 
'அட்சயா' என்பது சமஸ்கிருதத்தில் 'எப்போதும் குறையாது' என்று அர்த்தம். அதாவது, வாழ்வில் குறையாத செல்வங்கள் அனைத்தையும் அட்சய திருதியை அன்று தொடங்குவது தான் வழக்கம். ஆனால், பலருக்கு தெரிந்தது நகை மட்டும் தான். உங்களுக்கு தெரியுமா.. அட்சய திருதியை அன்று சுப காரியங்கள் அனைத்தும் தொடங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. உதாரணமாக, வீடு, நிலம் வாங்குதல், போன்றவை ஆகும்.

இதையும் படிங்க:  Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று தவறுதலாக கூட 'இந்த' தவறுகளை செய்யாதீங்க..லட்சுமி தேவி கோபப்படுவாள்!

அதுமட்டுமின்றி, சமையல் அறையில் இருக்கும், வீட்டில் குறையாத செல்வங்களான அரிசி, உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றையும் அந்நாளில் வாங்குவது மிகவும் நல்லது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலும், அட்சய திருதியை அன்று சுபகாரியங்கள் அனைத்தையும் தொடங்கினால் அவை அனைத்தும் நீண்ட நாட்கள் இருக்கும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று உருவாகும்  மங்களகரமான யோகம்; இந்த 3 ராசிக்காரர்கள் அதிஷ்டசாலிகள்.!

அட்சய திருதியை ஏன் கொண்டாடப்படுகிறது?

  • தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் வளர்ப்பிறையான, அமாவாசை மூன்றாம் நாள் அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 
  • அட்சய திருதியை அன்று தான் பிரம்மன், உலகத்தை கிருதயுகத்தில் தோற்றுவித்த்காக புராணங்களில் கூறப்படுகிறது. குறிப்பாக, காக்கும் கடவுளான விஷ்ணுவால் தான் கிருதயுகம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் புராணங்கள் சொல்லுகிறது.
  • அதுபோல திருமால் தன்னுடைய ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தை எடுத்தது இந்த அட்சய திருதியை நாளில் தான் என்று இந்து புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
  • இந்து கடவுளின் தெய்வமான அன்னபூரணி தேவி அவதரித்தது இந்த அட்சய திருதியை நாளில் தான்.
  • அதுபோல பகவான் கிருஷ்ணர் தனது நண்பர் குசேலருக்கு செல்வங்களை அள்ளிக் கொடுத்ததும், இந்த அட்சய திருதியை நாளில் தான்.
  • மேலும், புனித நதியான கங்கை நதி, அட்சய திருதியை நாளில் தான் பூமிக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லுகிறார்கள். எனவே, இந்நாளில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
  • குபேரர் மகாலட்சுமியை வழிபட்டு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்நாளில் தான் பெற்றதாக புராணங்கள் சொல்லுகிறது.
  • முக்கியமாக, திருமாலின் மனதில் திருமகள் இடம் பிடித்த நாள் இந்த அட்சய திருதியை நாள் என்று கூறப்படுகிறது. இதனால் தான் இந்நாளில், லட்சுமி தேவியை மட்டும் வழிபடாமல் பெருமாளையும் வழிபட சேர்த்து வழிபட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
  • அட்சய திருதியை நாளில் தான் மாகாபாரதத்தில், பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது அட்சய பாத்திரத்தை பெற்றதாக புராணங்கள் சொல்லுகிறது.

இப்படி பல சிறப்புகளைக் கொண்டாலும், இந்நாளில் சுப காரியங்களுக்காகவும், நல்ல தொடக்கத்திற்காகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. முக்கியமாக அட்சய திருதியை நாளில் என்ன செய்தாலும், அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!