ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் கில்லி... 10 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

First Published Apr 30, 2024, 10:34 AM IST

விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதன் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

ghilli Vijay, Rajinikanth

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் கோலிவுட்டில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. தமிழில் தற்போது வெளியாகும் புதுப்படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக சொதப்பி வருவதால், பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்து திரையரங்குகள் கல்லாகட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உலகமெங்கும் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

Ghilli RE Release

இதுவரை தமிழில் ரீ-ரிலீஸ் ஆன படங்களில் வாரணம் ஆயிரம், தனுஷின் 3, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தின. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் அமைந்தது. அப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே பலமுறை டிவியில் ஒளிபரப்பப்பட்டாலும் மக்கள் தியேட்டரில் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Kollywood : மே மாதம் வரப்போகுது.. ரிலீசுக்காக ரெடியான கோலிவுட் மூவிஸ் - சந்தானத்துடன் மல்லுக்கட்டும் "ஸ்டார்"!

Ghilli Box Office Collection

பொதுவாக ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் ஒருவாரம் திரையரங்குகளில் தாக்குப்பிடிப்பதே அதிசயம், ஆனால் கில்லி திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களை காட்டிலும் கில்லி படத்துக்கு தான் அதிகளவில் மக்கள் கூட்டம் வந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்களே மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கான டிக்கெட்டுகளும் கம்மி விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Lal salaam, Ghilli

இப்படி கம்மி விலையில் டிக்கெட் விற்பனை செய்தும் கில்லி படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி பத்து நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.18 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. மொத்தமாக உலகளவில் கில்லி பட வசூல் ரூ.26 கோடியை தாண்டி உள்ளது. நாளை மே 1-ந் தேதி விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்மையில் ரிலீஸ் ஆன ரஜினியின் லால் சலாம் படம் தமிழகத்தில் வெறும் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அப்படத்தின் லைஃப் டைம் வசூலை கில்லி ரீ-ரிலீஸ் இன்னும் ஓரிரு நாளில் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... டிஆர்பி-யில் குக் வித் கோமாளியை காலி பண்ண ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் களமிறங்கும் லெஜண்ட்

click me!